இதுதான் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால்… அஜித் அகர்கர் கருத்து..!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரை விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் தன்னுடைய உடல் தகுதியை விடாமல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்தும் கேம் பிளான் என்ற நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ரோகித் சர்மாவிற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்த மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரு போட்டியில் கூட உடற்தகுதி காரணமாக விளையாடாமல் இருந்ததில்லை. அதற்கு காரணம் அவர்கள் அவர்களுடைய உடல் தகுதி மீது எப்போதும் கவனமாக இருப்பார்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் புதிய கேப்டனாக களமிறங்கும் ரோஹித் சர்மாவும் உடல் தகுதியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அது அவருக்கு சவாலானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

மேலும் பேசிய அவர், வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிக்கு ஒரே ஒரு கேப்டன் என்ற பிசிசிஐ முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு இந்த முடிவு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என அவர் பேசினார்.

வருகிற பிப்ரவரி 6 அன்று இந்தியா-மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…