1000-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா…வாழ்த்து கூறிய மாஸ்டர் பிளாஸ்டர்..!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற பிப்ரவரி 6 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய அணி விளையாடும் ஆயிரமாவது ஒருநாள் போட்டி ஆகும். இதனையடுத்து கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த 1000-ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை 1974 ஆம் ஆண்டு விளையாடியது. இந்திய அணி தனது ஆயிரமாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. மேலும், தனது ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்முறையாக 1000 போட்டிகளில் விளையாடும் அணி என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.

தனது வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது, இது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய அணி தனது ஆயிரமாவது போட்டியில் விளையாட உள்ளது. இந்த சாதனை முன்னாள் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என கூறினார்.

இதுவரை இந்திய அணி 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 518 போட்டிகளில் வெற்றியும், 431 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 41 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. இந்தியா தனது 500-வது ஒருநாள் போட்டியை கடந்த 2002 ஆம் ஆண்டு விளையாடியது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய அணி ஆயிரம் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…