ஆஷஸ் தோல்வி: பதவி விலகும் உதவி பயிற்சியாளர்..!

. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை தழுவியது. அதன் காரணமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளர் தற்போது தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் இத்தனை நாட்கள் இங்கிலாந்து அணிக்கு உதவி பயிற்சியாளராக இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் எனக்கு உதவியாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…