எந்த அணிக்காகவும் விளையாட தயார்… முன்னாள் பெங்களூரு வீரர் பேட்டி..!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும், மற்ற அணிகளில் ஏலத்தில் கேட்கப்பட்டாலும் அந்த அணிக்காக விளையாடவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சஹல் விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அணியினரால் சஹல் தக்க வைக்கப் பட்டார். ஆனால்,இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரைத் தக்க வைக்க வில்லை. அந்த அணி விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை இந்த ஆண்டு தக்கவைத்துள்ளது. இந்நிலையில், தான் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புவதாகவும், ஆனால் மற்ற அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அந்த அணிக்காக எனது 100 சதவீத உழைப்பைக் கொடுத்து விளையாடவும் தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன். அவரது தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியது பெருமையாக உள்ளது. அவர் மைதானத்தில் இருக்கும் போது நேர்மறையான சக்தியை மற்ற வீரர்களுக்கும் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்றார்.

ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சஹல் இவ்வாறு கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…