என்ன வெப்சீரிஸில் தோனியா… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் பல்வேறு துறைகளில் நாட்டம் செலுத்தி வருகிறார். சில நாட்களாக தனது பண்ணை தோட்டத்தில் செர்ரி பழங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மகேந்திர சிங் தோனி நடிக்க உள்ள அந்த வெப்சீரிஸ்க்கு அதர்வா த ஆரிஜின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. இன்று அதனுடைய முதல் பார்வை வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெப்சீரிஸ் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி அவருடைய படைப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மேலும், இந்த வெப்சீரிஸ் புராண காலத்தில் நடைபெறும் விஷயங்களை அறிவியல் கற்பனையுடன் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்த புதிய வெப்சீரிசை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான வேலைகளை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாக்ஷி தோனி முன்னெடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த வெப் சீரீஸ் த்ரில்லிங்காக செல்லும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் த ரோர் ஆஃப் த லயன் என்ற ஆவணப்படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…