தலைவனாக இருக்க கேப்டன்சி முக்கியமல்ல… விராட் கோலி பேட்டி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தலைவனாக இருக்க கேப்டன்சி முக்கியம் அல்ல என தெரிவித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். முன்னதாக, உலக கோப்பை டி20 தொடருக்கு பின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி இருந்தார். அதன்பின் அவரது ஒருநாள் கேப்டன்சியில் இருந்தும் அவரை பிசிசிஐ நீக்கியது.

இன்று ஃபயர் சைடு சாட் வித் விராட் கோலி என்ற நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த விராட் கோலி கூறியிருப்பதாவது, முதலில் ஒருவர் அவரால் என்ன சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும். அது குறித்து ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பான பங்களிப்பை ஒருவர் அளிக்க வேண்டும். அதில் அவர் பெருமைப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு நல்ல தலைவனாக இருக்க கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மகேந்திர சிங் தோனி அணியில் இருக்கும் போது மட்டுமல்ல தற்போதும் கூட அவரது ஆலோசனை இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது தலைமையின் கீழ் நான் விளையாடியுள்ளேன் என்றார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 40 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…