இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
முதலில் ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் அபாரமாக விளையாடிய இந்திய அணி கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியது.
ஒருநாள் போட்டி முடிவு பெற்ற நிலையில் இந்தியா இலங்கை இடையிலான டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
ஒருநாள் தொடரை வென்றுள்ள இளம் இந்திய அணி டி20 தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.