மூன்றாவது ஒருநாள் போட்டி, பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா!

ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரமதேசா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. இந்திய அணி 2.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இன்று விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வீரர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவும், ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் எண்ணத்துடன் இலங்கையும் விளையாடி வருகின்றன.