உலக கோப்பை தொடரில் ஒரே குரூப்பில் இடம்பெறும் இந்தியா-பாக்கிஸ்தான்!

ஐசிசி நடத்தும் உலக கோப்பை டி20 போட்டி வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

கொரோனா பரவலின் காரணத்தினால் உலக கோப்பை டி20 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று பங்கேற்கும் நாடுகளின் குழு விவரம் வெளியாகியுள்ளது. அதில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த குழுக்களில் இருக்கின்றன போன்ற விவரங்கள் உள்ளன.

கிரிக்கெட் போட்டி என்றாலே பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி இந்தியா இடம் பெற்றுள்ள அதே குரூப்பில் இடம் பெற்றுள்ளது.

குரூப் 1 இல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2 வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *