ஐசிசி பேட்டிங் தர வரிசையில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்!

ஐசிசி பேட்டிங் தர வரிசையில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான தரவரிசை பட்டியலில் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி முதலிடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் இத்தனை நாள் வைத்திருந்தார். ஆனால், தற்போது அவருடைய அந்த முதலிடத்தை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தட்டிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசையில் 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா இந்த பேட்டிங் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து வருகிறார்.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களில் முதல் மூன்று இடங்களில் இரண்டில் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.