பேட்ஸ்மேன்களை அனுப்புவிங்களா, மாட்டீங்களா…? கோபத்தில் இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் காயம் காரணமாக 6 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய அணி பிசிசிஐ இடம் எங்களுக்கு பேட்ஸ்மேன்கள் தேவை என கோரிக்கை வைத்துள்ளது.
தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்குப் பதிலாக பிரித்வி ஷாவை தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சில பேட்ஸ்மேன்கள் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன்கள் வேண்டும் என இந்திய அணி தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்ட போதிலும் பிசிசிஐ தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
இதற்கிடையே, இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. அதில் பிரித்வி ஷா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.