தோனி குறித்து ரசிகர் கேட்ட கேள்வி…. முன்னாள் வீரரின் பளிச் பதில்!
ஐபிஎல் 2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒருவேளை தோனியை தக்க வைக்க வில்லை என்றால் தோனி அடுத்து என்ன செய்வார் என்ற கேள்வியை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் முன்னாள் வீரர் பிராட் ஹாக்கை டேக் செய்து கேட்டுள்ளார்.
அதற்கு பிராட் ஹாக் அளித்த பதில்தான் சுவாரசியமானது. சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து அணியில் விளையாடுவார். ஒருவேளை அவர் அணியில் ஒரு வீரராக களம் இறங்க வில்லை என்றால், தோனி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக அவதாரம் எடுப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்கின் இந்த பதில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.