டி20 போட்டியில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்!

டெல்லி சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுபோத் பாட்டி உள்ளூரில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த அசத்தலான பேட்டிங் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி லெவன் அணிக்கு ம், சிம்பா அணிக்கும் கிளப் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர்களில் 256 ரன்களை குவித்தது.
இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய அவர் 17 சிக்சர்களையும், 17 பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் இதற்கு முன்னதாக 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.