ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியை சேர்ந்த கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் இவருக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை இவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
கேன் வில்லியம்சன் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஸ்டீவன் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் விராட்கோலி 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 6-வது இடத்திலும் மற்றும் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.