நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

5 நாட்கள் ஆட்டம் முடிந்த நிலையில் மழையால் கூடுதலாக கொடுக்கப்பட்ட ஆறாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 170 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் போட்டி வெற்றியில் முடியுமா அல்லது டிரா ஆகுமா என்ற ஆவல் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *