தோனி இல்லாத ஐசிசி இறுதிப்போட்டி…கேப்டன் கூலை மிஸ் செய்யும் இந்திய வீரர்கள்!
2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மகேந்திர சிங் தோனி.
தோனியின் தொடக்க ஆட்டங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும், அதன் பின் அவர் விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் கிரிக்கெட் ரசிகர்களை மிரளச் செய்தது.
கிரிக்கெட்டிற்கு அறிமுகமான சிறிது காலத்திலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் மகேந்திர சிங் தோனி.
தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாக செய்தார். அதன் மூலம் 2007 – 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இடம் பிடித்தார். அதே ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை தனது தலைமையின் கீழ் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். தொடர்ந்து ஒருநாள் அணிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2008இல் டெஸ்ட் கேப்டனாகவும் அணியை வழிநடத்த தொடங்கினார்.
கேப்டனாக பொறுப்பேற்ற ஆறு ஆண்டு காலத்தில் டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் ஷார்டர் பார்மெட் டோர்ணமென்ட்களின் கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் தோனி.
இவ்வாறு ஐசிசியின் கோப்பைகளை வென்று குவித்த தோனி, அவரது கடந்த 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் முதன்முறையாக ஐசிசி நடத்தும் இறுதிப்போட்டியில் அவர் விளையாடாமல் இருப்பதால் இந்திய அணியினர் அவரைப் பெரிதும் மிஸ் செய்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி தோனி இல்லாமல் முதல்முறையக 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் விளையாட உள்ளது. அவர் அணியுடன் விளையாடவில்லை என்றாலும் தனது ஜூனியர்களுக்கு அந்த ஜாம்பவான் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்குள் இருக்கும். அதை பின்பற்றி இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்புவோம்.