உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான நியூசிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு
உலக டெஸ்ட் சாம்பியனஷிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஏற்கனவே நியூசிலாந்து வெளியிட்டுருந்தது. இதிலிருந்து தற்போது 15 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங், வில் யங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
காயம் காரணாமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் குணமைடைந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.