தோனி ஓய்வு பெறாமல் இருந்தால் பாகிஸ்தானின் கேப்டன் ஆக்கியிருப்பேன்…முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவரை ஆக்கி இருப்பேன் என அந்த அணியின் முன்னாள் வீரர் யாசர் அரபாத் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் யாரி ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், தோனி இப்போது விளையாடுவதில்லை. ஒருவேளை அவர் விளையாடிக்கொண்டு இருந்திருந்தால் அவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கியிருப்பேன். இப்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தோனி போன்ற அட்டகாசமான கேப்டன்தான் தேவைப்படுகிறார்.

தோனிக்கு திறமையை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரியும். எங்களது வீரர்கள் திறமையானவர்கள்தான் ஆனால் அவர்களை வழிநடத்த தோனி போன்ற திறமை வாய்ந்த தலைவன் தேவை என்றார்.

மேலும் பேசிய அவர், அக்தர் சொல்வார் எப்போதெல்லாம் நான் பவுலிங் போட்டிருக்கிறேனோ அந்தப் பந்துகளை எல்லாம் அவர் அடிப்பார் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று. அந்தளவுக்கு தோனி மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் வலிமையானவர்.

எனக்கு தெரிந்து இப்போதுள்ள வீரர்கள் ஒருவர் கூட பினிஷிங் விஷயத்தில் தோனியை நெருங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…