அணியில் இடம் பெற்ற வீரர்களை விளையாடாமல் அழைத்து வர மாட்டேன்…மூத்த கிரிக்கெட் வீரர் பேட்டி!

என்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீரர்களை அணியில் விளையாட வைக்காமல் திரும்ப அழைத்து வர மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ESPNCricinfo இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள ராகுல் டிராவிட் கூறியதாவது,
நான் வீரர்களிடையே நேரடியாகவே சொல்லிவிடுவேன். கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன். ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நானும் அதுபோல இருந்திருக்கிறேன்.
உள்நாட்டில் 700-800 ரன்களை குவித்துவிட்டு வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் ஒருவரின் திறமை எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒரு முறை நன்றாக விளையாடி தேர்வாளர்களின் கவனத்திற்கு வந்துவிட்டால், மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்த வீரரின் மீது விழும் எனவும், அதனைப் பூர்த்தி செய்வது அவ்வீரரின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்கைரயிலோ அல்லது சாலையிலோ விளையாடுவது உங்களை ஒரு முழு கிரிக்கெட் வீரராக்காது. இந்த விளையாட்டை காதலிப்பவர்கள் முறையான கிரிக்கெட் மேட்களிலும், பிட்ச்களிலுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அப்படி விளையாட்டை நேசிப்பவர்களுக்கு நல்ல மேட்டையும், பிட்சையும் உருவாக்கி தர வேண்டும். சரியான பயிற்சிகளை கொடுக்க வேண்டும், அந்தப் பயிற்சியாளருக்கு உடற்பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும். அரை குறையாக அனைத்திலும் இருந்தால் நல்ல வீரர்களை உருவாக்க முடியாது என அவர் தெரிவித்தார்.