இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் ஜூன் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு இங்கிலாந்து சென்றடைந்தனர்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொரோனா தனிமைப்படுத்தலுக்கு பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு பலம் பொருந்திய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.