தோனிக்கு முன் நான் கேப்டன் ஆவேன் என எதிர்பார்த்தேன்…பிரபல இந்திய ஆல்ரவுண்டர் பேட்டி!

தோனிக்கு முன் நான் கேப்டனாக அறிவிக்கப் படுவேன் என எதிர்பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
22 Yarns podcast என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்கு என்னை கேப்டனாக்குவார்கள் என எதிர்பார்த்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு மோசமான காலகட்டம். மூத்த வீரர்கள் பலரும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கவில்லை. அனுபவமில்லாத இளம் இந்திய வீரர்கள் ஒரு இளம் கேப்டன் தலைமையில் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.
தொடர்ந்து 4 மாதங்கள் இந்தியாவை விட்டு வெளியே இருக்க வேண்டும் என்பதால் மூத்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். மேலும், 2007 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை தொடரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அப்போது டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கும் இந்திய அணிக்கு நான் கேப்டனாக அறிவிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்போது தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் என்பதெல்லாம் கவலையில்லை, யாராக இருந்தாலும் 100% ஆதரவு கொடுப்பேன். அது ராகுல் டிராவிடாக இருந்தாலும் கங்குலியாக இருந்தாலும் சரி, அணிக்கான வீரராக இருக்கவே விரும்புவேன். அதையே நான் ஓய்வுப்பெறும் வரை செய்தேன் என்றார் யுவராஜ் சிங்.
அந்த 2007 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு இளம் வீரர்களின் பட்டாளம் அன்னிய மண்ணில் இந்திய பெருமை நிலைநாட்டியது.