இவருக்கு ஆங்கிலம் தெரியாது…இந்திய ஆல் ரவுண்டரை தரக்குறைவாக பேசிய வர்ணனையாளர்!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தரக்குறைவாக பேசிதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது எனவும் விமர்சித்துள்ளார்.
தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஜடேஜா குறித்து ஏளனம் செய்த சாட்டை(chat)- ஐ ட்விட்டரில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக செயல்பட்டு வருகிறார்.
கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக இவர் முன்வைக்கும் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமையும். தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா குறித்து இவருடைய சர்ச்சைப் பேச்சு ஜடேஜாவின் ரசிகர்களால் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவரது இந்த செயலுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சாட்டை வெளியிட்ட நபர் கூறியதாவது, ஜடேஜா குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்-ன் கருத்தை வெளியிடக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர்-ன் உண்மை முகம் தெரியவே இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், பிசிசிஐ சஞ்சய் மஞ்ச்ரேக்கர்-ஐ இனி வரும் காலங்களில் கிரிக்கெட் வர்ணனை செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.