இந்தியா வெல்வது கடினம்…பிரபல இந்திய வீரர் கருத்து!
உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற ஜூன் 18-ஆம் தேதி லண்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது.
இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெல்வது கடினம் என்று கூறியுள்ளார்.
தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதனால் இந்திய அணியைக் காட்டிலும் நியூசிலாந்து அணி வீரர்களுக்குசற்று சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
ஆனால், பேட்டிங் வரிசையில் இந்திய அணி வீரர்கள் வலிமை மிக்கவர்களாக உள்ளனர். ரோகித் சர்மாவின் ஆட்டம் பாராட்டும் விதமாக அமைகிறது எனவும் கூறினார்.
இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும். ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் திரட்ட முடியும். தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார்.