இவ்வளவு குறைவான சம்பளமா…? கொதித்தெழுந்த கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிதாக சம்பள ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜூன் 3-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தப் புதிய சம்பள ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சம்பளம் வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத் தொகையை காட்டிலும் 3 மடங்கு குறைவானதாகும். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை வீரர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும் எங்கள் நாட்டுக்காக தொடர்ந்து விளையாடுவோம் எனவும் கூறியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போதும் கிரிக்கெட் வாரியம் அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.