என்னை இவருடன் ஒப்பிடுவது பெருமையாக உள்ளது….மனம் திறக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
இந்திய கேப்டன் விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது பெருமையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேனும், கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியுடன் என்னை ஒப்பிடும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு வீரரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு வீரருக்கும் விளையாடும் திறன் வெவ்வேறு விதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், எனது அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதுதான் என்னுடைய நோக்கம் எனவும், அதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல முன்னணி கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். எவராலும் ஒரே மாதிரியாக நீண்ட காலம் விளையாட முடியாது. எல்லா நேரத்திலும் நாம் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிதான். என்னுடைய விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.