புனேயில் புதிதாக வீடு வாங்கும் மிஸ்டர் கேப்டன் கூல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது புனேயில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
ஏற்கனவே, மகேந்திர சிங் தோனிக்கு ராஞ்சியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. ரைசிங் புனே சூப்பர் ஜென்ட்ஸ் அணிக்காக தோனி விளையாடிய போது அவருக்கு புனே நகரம் பிடித்து விட்டதாகவும் அதன் காரணமாகவே தற்போது அங்கு வீடு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தோனி அவரது மனைவி சாக்ஸியுடன் புதிய இல்லத்தில் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.