நாங்க பழைய இந்திய அணி இல்லை…பிரபல வேகப்பந்துவீச்சாளர் பேச்சு!

முன்பு இருந்த இந்திய அணி வேறு இப்போது இருக்கும் இந்திய அணி வேறு என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது இருக்கும் இந்திய அணி எதிரணியை அதிகம் யோசிக்கும் இடத்தில் வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி ஜூன் 2 ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இப்போது மும்பையில் இருக்கும் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
இதுகுறித்து இந்தியா டிவிக்கு பேட்டியளித்த முகமது ஷமி இந்தியாவில் 4-5 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் திறன் கொண்டவர்கள்.
எனவே, நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளதாகவும் மற்றும் இது முன்பு இருந்த இந்திய அணி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.