புதிய ஜெர்சியில் மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்…மனம் திறக்கும் பிரபல இந்திய வீரர்!

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் சவுத்தாம்டன் மைதானத்தில் வருகிற ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெற உள்ளது.
இதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி வீரர்கள் மும்பை ஹோட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் தூணாக விளங்கும் புஜாராவும் மும்பை ஹோட்டலில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியில் களமிறங்க உள்ளது.
இந்த புதிய ஜெர்சியில் மைதானத்தில் களமிறங்க காத்திருப்பதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் புதிய ஜெர்சியை அணிந்து ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புஜாராவின் இந்த புகைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.