கொரோனாவை நினைத்து கண்ணீர் சிந்திய நியூசிலாந்து வீரர்

இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் முறையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் 14 ஆவது ஐ.பி. எல் போட்டி நடைபெற்றது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல் தொடருக்காக இந்தியாவில் தங்கியிருந்த வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். ஆனால், அவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானவர்களால் தங்கள் நாட்டுக்குச் செல்ல முடியவில்லை.

அந்த வகையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் டிம் செய்ஃபர்ட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இந்தியாவில் இருந்து வெளியேற முடியவில்லை.

ஒரு வழியாக கொரோனாவில் இருந்து மீண்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள அவர் ஆக்லாந்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் குவாரன்டைனில் இருக்கிறார். ஆனால், கொரோனா உறுதியான போது, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை தற்போது தான் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.

அவர், “அப்போது எனக்கு லேசாக சளித் தொல்லை இருந்தது. ஆஸ்துமாவால் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தியைக் கேட்டதும் மனமுடைந்துவிட்டேன். உலகமே நின்றுவிட்டதுபோல் இருந்தது. அடுத்து என்ன என்பதை என்னால் யோசிக்கவே முடியவில்லை. அதுதான் மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது. பல கடினமான விஷயங்கள் காதுகளில் விழுந்துகொண்டே இருந்தது.

அது எனக்கும் நடக்குமோ என்று அச்சப்பட்டேன். அப்போது இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. நானும் அந்த நிலைக்குப் போய்விடுவேனோ என்று நினைத்தேன். கோவிட் பற்றிய புதிர்கள், அதற்கு எப்படி ரியாக்ட் செய்யப்போகிறோம் என்ற அறியாமை அதெல்லாம் என்னை மிகவும் வருத்தியது” என கூறிக்கொண்டிருக்கும் போதே மனமுடைந்து கண் கலங்கி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…