டிராவிட் என்றால் எனக்கு பயம்…மனம் திறக்கும் இளம் கிரிக்கெட் வீரர்!

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது அவரைப் பார்த்து நான் மிகவும் பயப்படுவேன் என இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியில் விளையாடுவது பல இளைஞர்களின் கனவு. எனக்கும் அவரது பயிற்சியின் கீழ் விளையாடுவது பெருமையாக இருந்தது.
டிராவிட் வீரர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார். அதனால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவித பயம் தோன்றும். ஆனால், பயிற்சிக்கு பிறகு அனைவரிடமும் நட்பாக பழகுவார்.
ஒவ்வொரு வீரரின் மீதும் டிராவிட் அவர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான அறிவுரை வழங்குவார் என பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் எந்தவொரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றவில்லை. வீரர்களின் இயல்பான அணுகுமுறையை பின்பற்ற சொன்னார். பேட்டிங்கில் திருத்தங்கள் மட்டுமே சொல்வார். ஒரு வீரரின் மனிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தே அதிகம் பேசுவார் என்றார்.