குணமடைந்தார் கே.எல்.ராகுல்….இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா?

இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது தெரிய வந்தது.
மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் தகுதியுடன் குணமடைந்து வருகிறார். இதற்கிடையில் இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போது கே.எல்.ராகுல் குணமடைந்து இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம் பிடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.