எங்களுக்கு ஸ்பான்சர் மட்டும் கிடைத்தால்….கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு!
எங்களுக்கு உரிய ஸ்பான்சர் கிடைத்தால் நாங்கள் இதை இனி செய்ய வேண்டியதில்லை என ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாடி வரும் ரியான் பர்ல் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது.
அவர் என்ன கூறினார் என்றால் ஒவ்வொரு மேட்ச் முடிந்த பிறகும் ஜிம்பாப்வே அணி வீரர்கள் அவர்களது காலணிகளுக்கு பசை ஒட்டும் நிலையே தொடர்ந்து ஏற்படுகிறது.
ஒருவேளை எங்களுக்கு நல்ல ஸ்பான்சர் கிடைத்தால் இந்த நிலை நீடிக்காது என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.