ஒரே பள்ளியில் படித்த முன்னாள் மற்றும் இன்னாள் கேப்டனின் மனைவிகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள விராட்கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்டன் மகேந்திர சிங் தோனிக்கும், சாக்ஸிக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது இருவரின் மனைவிகளைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. சாக்ஸியும், அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்து நல்ல நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
னுஷ்கா ஷர்மாவின் தந்தை ஓய்வு பெற்ற கர்னல் அஜய் குமார் ஷர்மா கடந்த 199ம் ஆண்டு அசாஸாமிற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட போது, தன் குடும்பத்தையும் தன்னுடன் அசாமிற்கு அழைத்து சென்றார். அங்குள்ள செயின்ட் மேரி பள்ளியில் அனுஷ்கா ஷர்மா சேர்க்கப்பட்டார். அப்போது அந்த பள்ளியில் சாக்ஷி ஏற்கனவே அங்கு படித்து கொண்டிருந்துள்ளார்.
இருவரும் ஒரே பள்ளியில் படித்து, நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். தற்போது, அவர்கள் இருவரும் சிறுவர்களாக ஒரே பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.