நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி டெஸ்ட். ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி இருந்தது.
இதில் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவரால் தொடரில் விளையாட முடியாமல் நாடு திரும்பினார்.
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவரால் விளையாட முடியவில்லை. உரிய சிகிச்சைக்குப் பின் காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், மீண்டும் முழங்கையில் வலி ஏற்பட்டுள்ளதால் ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.