பந்துவீச்சை தேர்வு செய்தது பெங்களூர் அணி!
ஐபிஎல் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்கிறது.
கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நடப்பு சீசனில் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. பெங்களூரு அணி 5 வெற்றிகளையும், பஞ்சாப் அணி 2 வெற்றியையும் வசப்படுத்தி உள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்புடன் பெங்களூருவும் , தொடர் தோல்வியிலிருந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் பஞ்சாப் அணியும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன.