என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, நான் அந்த அர்த்தத்துல சொல்லல… விளக்கமளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

கொரோனா பரவல் சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனும், சுழற்பந்து வீச்சாளருமான ஆடம் ஜாம்பாவும் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா சூழல் அதகிரித்ததன் விளைவாகவே அவர்கள் விலகினார்கள்.

இதற்கிடைய ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா கூறியதாவது, ஐபிஎல்-லுக்காக சில வாரங்களாக பயோ பபுளில் இருக்கிறோம். ஆனால் நான் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை. ஒருவேளை இது இந்தியாவாக இருப்பதால் எனக்கு இப்படி நினைக்க தோன்றுவதாக நினைக்கிறேன். இந்தியாவில் சுத்தம் சுகாதாரம் எப்படிப்பட்டது என சொல்லி வளர்க்கப்பட்டதால் இங்கு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் பாதுகாப்பானதாக எனக்கு தோன்றவில்லை என்றார்.

தற்போது தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாக ஆடம் ஸாம்பா விளக்கமளித்துள்ளார்.நான் ஒருபோதும் ஐபிஎல் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தின் உள்ளே வைரஸ் நுழைந்துவிடும் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பானவர்களின் கையில் நடந்துக்கொண்டு இருக்கிறது எனவும் தொடர் சிறப்பான முறையில் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…