எங்களுக்கு தனி விமானம் அனுப்புங்க… கதறும் ஆஸ்திரேலிய வீரர்!

ஐபிஎல் 14-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனாவால் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்கள் போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே தமிழக வீரர் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
இன்று ஆஸ்திரேலிய வீரர் கிறிஷ் லின் தற்போது ஐபிஎல்-ல் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு போட்டிகள் முடிந்தவுடன் தனிவிமானம் ஏற்பாடு செய்து தருமாறு ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். கடினமான சூழல் இருப்பது தெரிந்தே ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டோம் எனவும் மேலும் ஐபிஎல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு 10 சதவீதம் வருமானம் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளிலில் விளையாடும் அனைத்து வீரர்களும் கடுமையான பயோ பப்புளில் இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார்.