கடினமான சூழலில் நான் எப்படி விளையாடுவேனு தெரியுமா? மனம் திறக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்!
ஐபிஎல் 14 சீசனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது.இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.இதன்மூலம் தனது முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாபின் பேட்ஸ்மன்கள் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையை கட்டினர்.பஞ்சாப் அணி 6.2 ஓவர்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.அப்போது களமிறங்கிய வீரர் ஷாருக்கான் பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்டார்.அவரது சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியது.
அதிரடியாக ஆடியாக ஷாருக்கான் 36 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்தார்.ஆட்டத்தின் முடிவி்ற்கு பிறகு பேசிய ஷாருக்கான் எனக்கு கொடுக்கப்பட்ட பணி பின் வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வதே ஆகும்.ஆனால், சில நேரங்களில் முன் வரிசை பேட்ஸ்மன்கள் விரைவில் ஆட்டமிழக்கும் போது அதற்கு ஏற்றாற்போல் ஆட வேண்டும்.
இது போன்ற கடினமான தருணங்களில் சிறப்பாக செயல்படும் திறமை என்னிடம் உள்ளது எனவும் நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் பேட்ஸ்மேனாக மேம்பட்டுள்ளேன் எனவும் மனம் திறந்தார்.