மும்பையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும்
பொதுவாக கிரிக்கெட் என்றாலே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.வருகிற ஏப்ரல் 9 முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளது.முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோலி தலைமையிலான பெங்களூருவை எதிர்கொள்கிறது.
மும்பையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,மும்பையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் 2021 போட்டிகள் மும்பையில் நடைபெறும் என பி.சி.சி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நிலைமை மோசமானால் மும்பையில் நடக்கும் போட்டிகளுக்கு பதிலாக ஹைதராபாத்தில் போட்டிகளை நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.