சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிக்கு கொரோனா!

ஐபிஎல் 2021 வருகிற ஏப்ரல் 9 முதல் நடைபெற உள்ளது.இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் நிர்வாகம் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது.ஆனால்,தற்போது வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே டெல்லி அணி வீரர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மும்பையில் தங்கியிருக்கும் அவருக்கும் மேலும் சில நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது