இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், வருண் சக்ரவா்த்தி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடா் முடிந்ததும், வரும் மாா்ச் 12-ஆம் தேதி முதல் டி20 கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. 5 ஆட்டங்களுமே ஆமதாபாதில்தான் நடைபெறுகின்றன. மாா்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் முறையே 5 ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷன் கிஷான் (விக்கெட் கீப்பா்), யுவேந்திர சாஹல், வருண் சக்ரவா்த்தி, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், ராகுல் தெவேதியா, டி.நடராஜன், புவனேஸ்வா் குமாா், தீபக் சாஹா், நவ்தீப் சைனி, ஷா்துல் தாக்குா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *