தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே தமிழக அரசு அண்மையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவு படுத்தி உள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,054 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இருந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று நோயின் தாக்கம் தலைநகர் சென்னையில் குறைந்து காணப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு தமிழகம் முழுவதும் 37 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு 30 ஆக குறைந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 23,084 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…