ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா!

கொரோனா பரவல் உலக நாடுகளில் குறையத் தொடங்கினாலும் இன்னும் நோய்த்தொற்று முழுமையாக நீங்கவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை உலக நாடுகள் அனைத்தும் வேகப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் 1015 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1028 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது சற்றே அதிகமாகும்.
ரஷ்யாவில் இதுவரை பெருந்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,26,353 ஆக இருந்து வருகிறது.