ஒரே நாளில் இவ்வளவு தடுப்பூசியா? அமைச்சர் தகவல்

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவிற்கு தடுப்பூசி போடுவதுதான் தீர்வு என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
இந்தியாவில் கொரோனா அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இiந்நிலையில் அங்கு கொரோவுடன் நிபா வைரஸ் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் கட்டாயம் காட்ட வேண்டும் என்றும் நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 12ம் தேதி இதனைச் செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.