கொரோனா அதிகரிப்பு… மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் அமெரிக்கா!

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா பரவலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் நோயின் பரவலானது கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை.

உலகின் வல்லரசு நாடுகளும் கொரோனா பரவலை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவும் வேளையில், அமெரிக்காவில் கொரோனா 4-வது அலை வீசத் தொடங்கியுள்ளது.

மேலும், டெல்டா வகை கொரானா வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரைக்க உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா நான்காம் அலை வேகமெடுத்துள்ளது. குறிப்பாக டெல்டா வகை பரவி வருவதால் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அரசின் மருத்துவர் நிபுணர்குழுவும் இந்த வாரம் இது தொடர்பான பரிந்துரையை வெளியிட உள்ளது. முதலில், மருத்துவ பணியாளர்கள், வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு பின்னர் அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…