சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறதா?

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. அதன்பின் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக கொரோனாவின் பிடியில் வந்தன.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட சீனா, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தொற்றுப் பரவலை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது சீனாவில் உருமாறிய கொரோனாவான டெல்டா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் கால் பதித்து பரவி விட்டது.
குறிப்பாக, கொரோனா முதல்முறையாக கண்டறியப்பட்ட வுகான் நகரில் ஓராண்டிற்கு பிறகு, ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வுகான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் நியூக்ளிக் அமில சோதனை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.