இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… அச்சத்தில் மக்கள்

இந்தியாவில், கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றால் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் பாதிப்பு மூன்றாம் அலைக்கான தொடக்கமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்புகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்குப் புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்துள்ளது. 36,946 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.