சிறப்பாக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி… ஐசிஎம்ஆர் பாராட்டு!

டெல்டா வகை கொரோனா பரவலுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக மத்திய மருந்து ஆராய்ச்சி கழகம் பாராட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக உள்நாட்டு தடுப்பூசிகளான கோவிஷுல்டு மற்றும் கோவாக்ஸின் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவசர பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் உலக நாடுகளில் அதிகமாக பரவிவரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸை எதிர்த்து எவ்வாறு செயல்படுகிறது என்பதில் ஐயம் இருந்தது.
இந்நிலையில்,மத்திய மருந்து ஆராய்ச்சி கழகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.