தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் இந்திய வீரர்கள்!

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 t20 போட்டிகளில் விளையாடி உள்ளது.
அதில் ஒருநாள் தொடரில் இந்தியாவும், டி20 தொடரில் இலங்கையும் வெற்றி பெற்றன.
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது t20 போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த போட்டி அடுத்த தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் முடிவிற்குப் பிறகு மேலும் 2 இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
யார் அந்த இரண்டு வீரர்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது சுழற்பந்து வீச்சாளர்களான சஹால் மற்றும் கிருஷ்ணப்ப கௌதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.