மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையா?
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதில், அனைத்து தடுப்பூசிகளும் இரண்டு டோஸ்கள் போடப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலை பரவும் என்ற அச்சம் உள்ளதாலும் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் பரவலும் அதிக பாதுகாப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ”இந்தியாவில் உருமாற்ற கொரோனாவின் வீரியம் அதிகரிப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளோடு நிறுத்தி விடாமல் மூன்றாவது டோஸ் போட வேண்டிய தேவை ஏற்படலாம்” என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.